Nakkasalem people seize buses and protest against the non-arrival of buses in the Village near by Perambalur !
பெரம்பலுர் அருகே பை-பாஸ் சாலையில் பேருந்துகள் செல்வதை கண்டித்து நக்கசேலம் கிராம மக்கள் 5க்கும் மேற்பட்ட பேருந்துகைள சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நக்கசேலம் கிராமம். துறையூர் – பெரம்பலூர் சாலையில் உள்ளது. நக்கசேலத்தை சுற்றி உள்ள குரூர், புதுஅம்மாபாளையம், சிறுவயலூர், புதுஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நக்கசேலம் வந்து பெரம்பலூர், துறையூர், நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், ஒசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நக்கசேலம் கிராமத்திற்குள் வராமல் பைபாஸ் சாலையில் சென்றுவிடுவதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று இரசு சுமார் 8 மணி அளவில் அவ்ழியாக வந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிறைப்பிடித்து, மக்கள் மறியல போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், மற்றும் அருசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் கலைந்து சென்றனர்.