Namakkal Collector requested to celebrate smokeless Bhogi

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியமா மரியம் விடுத்துள்ள வேண்டுகோள்:
நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.
ஆனால் தற்போழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கின்றனர்.
இதனால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகனங்களின் செல்வோருக்கும் மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.