Namakkal Municipality Grievance Camp for Pubic: An immediate solution to the petitions
நாமக்கல் நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் துறையூர் ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன், முன்னாள் நகராட்சி துணைத்தலைரவ் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த முகாமில் புதிய சொத்துவரிவிதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் வரி விதித்தல், கட்டிட அனுமதி,காலிமனை நிலங்கள் முறைப்படுத்திட ஆகியவை குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் சொத்துவரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை உள்ளிட்டவைகளில் பெயர் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்த மனுக்களும் பெறப்பட்டன.
இந்த முகாமில் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பொதுமக்கள் கொடுத்த மனுவிற்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
இந்த முகாமில் நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சம்பத், சாதிக்பாட்சா, வடிவேல் குமார், பழனிவேல், நாமக்கல் நகர துணை செயலாளர் நரசிம்மன், பொருளாளர் ராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் நகராட்சிஅதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.