Natural Science Research Organization Launches in Perambalur District Arumbavoor!
இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் அதன் நிறுவனர் மழைராஜு (எ) ராஜு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தேர்வும், அடுத்தகட்டமாக இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.அதில்,
இயற்கை அறிவியல் ஆராய்ச்சி அமைப்பானது 20.05.2022 ஆம் தேதி, பதிவு செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில், தற்காலிகமாக இயங்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தி மேம்படுத்தவும், தேசிய அளவில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் பயிற்சியளிப்பது.
கிராமப்புற விவசாயிகள் மேம்பாட்டிற்கு உதவுவதுடன், மேகங்கள் அறிவைப் பயன்படுத்திப் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு மழைபொழிவை முன்கூட்டியே கண்டறிய பயிற்சியளிக்கவும், அமைப்பின் நிறுவனர் மழைராஜு (எ) ராஜு அமைப்பின் தலைவராகவும், நிரந்தர உறுப்பினராகவும் செயல்படவும்,
இந்த அமைப்பின் செயல் தலைவராக ஒரிசாபாலு (எ) முனைவர் பாலசுப்ரமணி, துணைத் தலைவராக முனைவர் ராம்குமார், துணை செயலாளராக பாண்டிக்கண்ணன் , பொருளாளராக சுதா -வையும், நியமித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தன்னார்வலர்கள், அமைப்பு உறுப்பபினர்கள் பலர் கலந்து கொண்டனர்.