Near in Perambalur, MLAs provide financial assistance, food to those staying in precautionary camps of Nivar storm
பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி. இராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழச்செல்வன் ஆகியோர் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூடாரத்தில் தங்கி தொழில் செய்து வந்த சுமார் 46 நபர்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கியோடு, அவர்களுக்கு 5 குடும்படுங்களுக்கு ஆர்.டி.ராமச்சந்திரன் தனது சொந்த பணத்தில் இருந்து 3 ஆயிரம் நிதியுதவியையும் வழங்கி பாதுகாப்பான முறையில் தங்கி இருக்கவும் மேற்கொண்டு ஏதேனும் உதவிகள் தேவைபட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர். முன்னதாக பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்சசெல்வன் சார்பில் 3 நாட்களுக்கு முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சப்கலெக்டர் பத்மஜா, தாசில்தார் அருளானந்தம், ஆலாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனாசீனிவாசன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.செல்வகுமார், கல்பாடி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், வி.ஏ.ஓ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.