Near Perambalur, encroachment removal of lake water drains!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட கிழுமத்தூரில், ஏரிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73- ஏரிகளும், 33- அணைக் கட்டுகளும் உள்ளது. ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. கிழுமத்தூர் ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாகும்.

இந்த ஏரி 331.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலில் 0.41.00 ஹெக்டேர் பரப்பளவில் குடியிருப்பு பகுதியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததை வருவாய் வட்டாட்சியர் குன்னம் மற்றும் நில அளவையாளரால், சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்பு இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் குடியிருப்பு பகுதியாக மாற்றி இருந்த இடத்தை, உயர் நீதிமன்ற அரசாணை எண். 64 வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்: 29.09.2022-ன் படி நீர்வளத்துறையை சேர்ந்த அலுவலர்கள், வருவாய்த் துறையினர், காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புதாரர்களின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!