New DRO Baskar Joined
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா; அலுவலக வளாகத்தில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பா.பாஸ்கரன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரனுக்கு, வருவாய் துறை, வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். இவர், இதற்கு முன்பாக திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, முன்பு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.வேலு திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.