New separate joint drinking water scheme for Perambalur: Minister KN Nehru interview in Perambalur!
தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஆய்வு பணிகளை மேற்கொள்ள வந்தார். அரும்பாவூர் பார்வையிட்ட அவர், பின்னர், பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் அண்ணா நகர் பாலம் குறித்து பார்வையிட்டார். பின்னர், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
அரும்பாவூர் பேரூராட்சியை பார்த்துட்டு இப்ப பெரம்பலூர் நகராட்சிக்கு வந்து இருக்கிறோம். பெரம்பலூர் நகராட்சியில் கமிஷனர் இல்லைன்னு சொல்லி இருக்காங்க, நாளைக்கு கமிசனரை போற்றுவோம். குப்பை அள்ளுறதுக்கு புது வெகிள் வேணும்னுங்கா, கொடுக்கிறோம்னு சொல்லிட்டோம். ஆட்கள் பற்றாக்குறைன்னு சொன்னாரு அந்த ஆட்கள் பற்றாக்குறையும் முதலமைச்சர் அனுமதி கொடுத்திருக்கிறார், அதன்பேரில் சீக்கிரம் ஆட்களை எடுக்க சொல்லியிருக்கோம்.
அண்ணா நகர்ல ஒரு பாலம் கட்டணம்னு கேட்டாங்க, அதற்கும் அனுமதி வாங்கி கொடுக்கிறோம்னு சொல்லிட்டோம். குடி தண்ணீரை பொறுத்தவரைக்கும், காவேரி கொள்ளிடத்தில 248 இடங்களில் கூட்டு குடிநீர் எடுக்கிறோம், டுவாட் போர்டு இருந்து, அதுல 78 இடங்களில் பைப்லைன் உடைஞ்சி போச்சு. பெரம்பலூருக்கு போற பைப் லைனும் உடைந்து விட்டது அதை சரி பண்ணிகிட்டு இருக்கோம். பெரம்பலூர் நகருக்கு மட்டும் தனியா ஒரு கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். இதுல வந்து 17 எம் எல் டி தண்ணீர் வரும் என்று எங்கள் அதிகாரிகள் சொல்லி இருக்கார், ஜனத்தொகைக்கு ஏற்ப 20 எம்.எல்.டி தண்ணீர் கொண்டு வர முதலமைச்சரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்போம். இது ஒரு வருடம் முதல் – ஒன்றரை வருடம் ஆகும் என தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது, பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம்.சி.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி (பொ) ஆணையர் மனோகரன், நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், பெரம்பலூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எம்.ராஜ்குமார், அரசு வக்கீல் செந்தில்நாதன், நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.