Not only India, but the whole world praises the Chief Minister of Tamil Nadu: A. Raja MP speech in Perambalur district DMK functionaries meeting!

பெரம்பலூர் மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம், துறைமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. திமுக மாவடட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் வரவேற்றார். எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா. எம்.பி. போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஆ.இராசா.எம்.பி. பேசியதாவது:
தற்போது, நான் லண்டன் சென்றிருந்தேன், அங்கு இந்தியாவை சேர்ந்த மாநிலத்தவர்கள், பல்லேறு நாட்டினர்களும் தொழில் செய்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரை, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் பாராட்டுகின்றனர். கலைஞரை விட, அண்ணாவின் ஆளுமை அதிகம். அதேபோல் நமது முதலமைச்சரை காட்டிலும் கலைஞருக்கு ஆளுமைத்திறன் அதிகம் என்றார். அண்ணாவைப் போல, கலைஞரைப் போல உழைக்க கூடிய தலைவர் நம் முதலமைச்சர். அண்ணா முதல்வராக இருந்தபோது இவ்வளவு சவால்கள் இல்லை. அப்போது ஆர்.எஸ்.எஸ் சிறிய அளவில் இருந்தது. கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அரசியல்,மத ரீதியாக இப்படியொரு சவால் இல்லை. அண்ணா, கலைஞர் சந்திக்காத நெருக்கடி, மிகப் பெரிய சவால்களை இந்திய திருநாட்டில் சந்திக்க கூடிய ஒரு மகத்தான தலைவராக நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற ஒரு மனிதர்தான் இருக்கிறார் என்றார். தி.மு.க.தொண்டர்களின் முகத்தில் உள்ள கவலை நன்றாக தெரிகிறது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது நீங்கள் சந்தோஷமாக இருங்கள் எனவும் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:
தமிழகத்தில் எண்ணற்ற பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார். தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் தமிழக முதலமைச்சர் அவர்களை பாராட்டி வருகின்றனர். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.
இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செல்லபன், வி.ஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் -ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமு.மதியழகன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி. ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், த.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.இரவிச்சந்திரன், செல்வலட்சுமிசேகர், மு.வெங்கடேசன், எ.எஸ்.ஜாகிர்உசேன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்தமிழ்செவ்வி மதியழகன், பெரம்பலூர் ஒன்றிய பெருந்தலைவர் மீனா அண்ணாதுரை, துணை பெருந்தலைவர் கு.சாந்தாதேவிகுமார்,
வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ்,பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி செங்குட்டுவன், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை இரவிச்சந்திரன்,குரும்பலூர் பேரூராட்சி துணை தலைவர் கீதா துரைசாமி, அரும்பாவூர் பேரூராட்சி துணை தலைவர் சரண்யா குமரன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால்,மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, சிறுபான்மை அணி மாவட்ட அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ப.செந்தில்நாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால்,கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ்,மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், மாவட்ட மீனவரனி அமைப்பாளர் வி.சி.ரவி,மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.இரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தி.இராசா,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராஜா, ஏ.எம்.கே.கரிகாலன்,எ.ரசூல்அகமது, தங்க.கமல், டி.ஆர்.சிவசங்கர், தொ.மு.ச.பேரவை மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, தொ.மு.ச.கவுண்சில் மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன்,மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், தலைமை கழக பேச்சாளர் மு.விஜயரத்தினம், தகவல் தொழில்நுட்ப அணி குன்னம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் இராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜேஷ், வ.சுப்ரமணியன், ரா.சிவா,எம்.பிரபாகரன், அன்புச்செல்வன், பாண்டகப்பாடி கணேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2024- நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க.வை வெற்றி பெற செய்வது எனவும்,
கழக 15- வது அமைப்பு தேர்தலில் கழகத் தலைவராக முக. ஸ்டாலினையும், கழக பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகனையும், கழக பொருளாளராக டி.ஆர்.பாலு-வையு ம், கழக பொதுக்குழு மூலம் தேரந்தெடுக்கப்பட்டதற்கு இந்த செயற்குழு நன்றியும், .
துணைப் பொதுச்செயலாளராக மீண்டும் ஆ.இராசா.எம்.பி.அவர்களை தேர்ந்தெடுத்ததற்கு இந்த செயற்குழு பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு,
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இச்செயற்குழு நன்றி தெரிவித்தும்,
பெரம்பலூர் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலிளுக்கும், , உறுதுணையாக இருந்த துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.,க்கும், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கும் நன்றி தெரிவித்தும்,
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழா மற்றும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்தி கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அனைத்து பொது உறுப்பினர்களையும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்றும், தலைமை கழக அறிவுறுத்தலின் படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்களை நியமனம் செய்து உடனடியாக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறும்,
நவம்பர் -27, அன்று கழக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், திராவிட இயக்க சிந்தனையாளர்,செம்மொழி விருது பெற்ற பேராசிரியர் நெடுஞ்செழியன் மறைவிற்கும்,
மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தராஜ் தந்தை கே.எம்.ஆறுமுகம் மறைவிற்கும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்,து.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.சி.வெங்கடாசலம் மறைவிற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், கூடலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தென்னவன் அறிவேந்தி மறைவிற்கும், பெரம்பலூர் ஒன்றிய முன்னாள் அவைத்தலைவர் நூர்முகமது மறைவிற்கும், மாவட்ட இலக்கிய புரவலர் ராசு மனைவி சரசு மறைவிற்கும், வேப்பூர் தெற்கு, அந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் மறைவிற்கும், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் வி.களத்தூர் கிளைச் செயலாளர் மாரியாயி மறைவிற்கும், வி.களத்தூர் கழக முன்னோடி பஷீர், அப்துல் சமது மறைவிற்கும்,
மங்களமேடு முன்னாள் கிளைச் செயலாளர் அண்ணாமலை தாயார் பாப்பாயி மறைவிற்கும், மேட்டுப்பாளையம் முன்னாள் அவைத்தலைவர் சுப்ரமணி, கழக முன்னோடி கணேசன் மறைவிற்கும், எறையூர் கிளை கழக பிரதிநிதி கொளஞ்சி, நரிக்குறவர்கள் காலணி பிரதிநிதி ஆனந்தி மறைவிற்கும், வேப்பந்தட்டை கிளைச் செயலாளர் செல்வராஜ் தாயார் சுந்தாயி அம்மாள் மறைவிற்கும், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாலையூர் மணிவண்ணன் தாயார் சரோஜா மறைவிற்கும், நீலகிரி மாவட்ட பிரதிநிதி நெய்குப்பை முத்துசாமி மறைவிற்கும், வேப்பூர் தெற்கு ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி மூங்கில்பாடி புகழேந்தி தந்தை முத்தையா மறைவிற்கும், கரம்பியம் மாவட்ட பிரதிநிதி கதிரவன் சகோதரர் தமிழ்மணி, ஒன்றிய பொருளாளர் கோடையிடி ராமலிங்கம் மாமியார் மறைவிற்கும்,
வேப்பூர் தெற்கு, அந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.டி.செல்வராஜ் தாயார் மறைவிற்கும், அந்தூர் கழக நிர்வாகிகள் நல்லதுரை தாயார், பிரதிநிதி சங்கரன் மறைவிற்கும்,
பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் கிராமம், கழக முன்னோடி முன்னாள் கிளைச் செயலாளர் குணசீலன்(எ)பிச்சை மறைவிற்கும் , குரும்பலூர் பேரூர் கழக முன்னாள் செயலாளர் தேசிகர் மறைவிற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், முத்துகன்னு மனைவி வேம்பு மறைவிற்கும், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்,இரூர் செல்வராஜ், திருவளக்குறிச்சி நல்லுசாமி, பாடாலூர் செந்தில், பாடாலூர் தவமணி, பாடாலூர் வசந்தா ஆகியோரின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.இராஜ்குமார் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497