On behalf of Akila Bharata Ayyappa Seva Sangh, 2nd Annual Annadhanam near Perambalur: Dhanalakshmi Srinivasan inaugurated.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக இரண்டாம் ஆண்டாக அன்னதான சிறப்பு முகாம் இன்று 17.11.2022 முதல் 15.01.2023 வரை தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும் சபரிமலை பெரிய பாதையில் அழுதை நதிகரையில் 31.12.2022 முதல் 13.01.2023 வரை அன்னதான சிறப்பு முகாமும் நடக்கிறது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள மலையப்ப நகர் சாலை பிரிவு அருகே இன்று அன்னதானம் தொடக்க விழா இன்று நடந்தது. அன்னதான முகாம் கொடியை ஏற்றி வைத்த, தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் நிறுவனர்-தலைவர் அ.சீனிவாசன் ரிப்பன் வெட்டி அன்னதான சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனியின் நிறுவனர் டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமாரின் தந்தை சூரியபிரகாசம், ரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி குழும நிறுவனர்-தலைவர். எம்.சிவசுப்பிரமணியன், அஸ்வின்ஸ் நிறுவன குழுமத் தலைவர் கே.ஆர்.வி கணேசன், பெரம்பலூர் லையன்ஸ் மாவட்ட முதல் துணை ஆளுநர் மு.இமயவரம்பன் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மத்திய சரக செயலாளர், திருச்சி M.ஸ்ரீதர், சங்கத்தின் மாவட்ட செயலாளர் கடம்பூர் பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அன்னதான முகாமிற்கு த.ராமராஜ், த.சதீஷ்குமார், த.சிவராஜ் ஆகியோர் இடம் வழங்கினர். அன்னதான சிறப்பு முகாமில் கோகுலம் ஜுவல்ஸ் உரிமையாளர் குணசீலன் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.