On behalf of the Government of Tamil Nadu, marriage assistance worth Rs. 34 crore 85 lakh 74 thousand to 5362 beneficiaries belonging to Perambalur district

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை மூலம் ஏழை எளிய தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் பட்டம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை படித்த மகளிருக்கு திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.25,000-மும் மற்றும் பட்டப்படிப்பு படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ.50,000-மும் உதவித்தொகையுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகள் படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000- நிதிஉதவியுடன் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் 2,735 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 83 லட்சத்து 75,000 ஆயிரம் நிதி உதவியும், ரூ.7 கோடியே 59 லட்சத்து 23 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 21,880 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பட்டம், பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், நிதிஉதவியுடன் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் 2,627 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவியும் ரூ.7 கோடியே 29, லட்சத்து 25 ஆயிரத்து 520ம் மதிப்பீட்டில் 21016 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தலா 283 பெண் குழந்தைகளுக்கு ரூ.1கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2020-2021ம் நிதியாண்டில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளை படிக்கவைப்போம் (BETI BACHO BETI BADHO) திட்டத்தின் மூலம் பல்வேறு துறையின் வாயிலாக ரூ.41,83,800- மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விதவை மற்றும் ஆதறவற்ற பெண்களுக்கு ரூ. 9,37,500-மதிப்பீட்டில் 125 இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 30 திருகங்கைகளுக்கு சுயதொழில் புரிய தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 40 வயதை கடந்த திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.1 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச பள்ளி சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 3,96,242 மாணவர்களுக்கும் மற்றும் 4 லட்சத்து, 4 ஆயிரத்து 966 மாணவிகளுக்கும் இலவச பள்ளி சீருடை வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளுக்கு இதுவரை 140 வழக்குகள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர கட்டிடமும், மற்றும் பராமரிப்பு செலவினமாக ரூ.17 லட்சத்து 59 ஆயிரமாக மொத்தம் ரூ.41 லட்சத்து 59 ஆயிரம் செலவினம் மெற்கொள்ளப்பட்டது.

மகிளா சக்தி கேந்திரா திட்டம் மூலம் கிராமப்புற பெண்களின் திறமையை அதிகரிக்க செய்யவும், கல்வியறிவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை மேம்படுத்த இதுவரை 90-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் நடத்தப்பட்டுள்ளன.
இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 2016 முதல் 2020 வரை 5362 பயனாளிகளுக்கு ரூ.19 கோடியே 97 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் ரூ.14 கோடியே 88 லட்சத்து 49 ஆயிரத்து 120 மதிப்பிலான தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!