On behalf of the Narikuravar, I thanked A. Raja MP for accepting the request of the Chief Minister and providing the Narikuravar and sparrows at the tribal bar.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை, பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., கடந்த 28.03.2022 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதன் பேரில் ஒன்றிய அமைச்சரவை நேற்று நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக பெரம்பலூரில்
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.யை, பெரம்பலூர் மாவட்டம், மலையப்ப நகரில் வசிக்கும் நரிக்குறவர்கள், நரிக்குறவர்கள் சமுதாய சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.சிவக்குமார் தலைமையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!