On his arrival at Perambalur, Chief Minister M.K.Stalin clapped his hands on the way, welcomed him and took a photograph with the students of Almighty School.

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் இன்று சிப்காட் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட எல்லையான பாடாலூரில் கட்சியினரின் வரவேற்பை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் காரில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையை கடந்து வந்த போது. முதலமைச்சரை பார்ப்பதற்காக எதேச்சையாக சிறுவாச்சூரை சேர்ந்த ஆல்மைட்டி மாணவர்கள் முதலமைச்சரை பார்க்கும் ஆவலில் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து நின்று கைதட்டி ஆரவராமாக வரவேற்றனர்.

இதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மாணவர்களிடம் கை கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர், அவர்களிடம் சில மணித்துளிகள் மாணவர்களிடம் நன்றாக படிக்க அறிவுறுத்தியோடு, படித்து பெரிய பதவிகளுக்கு வர வாழ்த்துகளை தெரிவித்தார். அங்கிருந்த மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனால், மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆல்மைட்டி சேர்மன் ஆ.ராம்குமார், துணை சேர்மன் சி.மோகனசுந்தரம், சி.இ.ஓ செந்தில்குமார், முதல்வர்கள் ஹேமா, சாரதா, சந்திரோதயம், மற்றும் துணை முதல்வர் ராஜேந்திரன், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!