On the occasion of the Lets go to Village, Behalf Namakkal District Youth Congress

நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிராமம் நோக்கி திட்ட துவக்க விழா நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் நிர்வாகிகள் கிராமம் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து கட்சியின் செயல்திட்டங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கிராமம் செல்வோம் திட்ட துவக்க விழா நாமக்கல் அருகே உள்ள செல்லப்பா காலனியில் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெனிடா மார்ட்டின், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்மவுலானா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்கள். மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ், ராசிபுரம் நகரத்தலைவர் முரளி, சேந்தமங்கலம் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ், பெரியசாமி, ராணி, கவிதா உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.