Panchayat Presidents protest against condemning Perambalur Collector for insulting them by not buying the petition


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் அறிவழகன் என்பவர், ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையி ல் செயல்பட்டு வருவதோடு, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு, குப்பை கூலங்களை அகற்றுவது உள்ளிட்ட பொது மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு, வட்டார வளர்ச்சி அலு வலர் அறிவழகன் முழு ஒத்துழைப்பு தராமல், ஊராட்சி மன்ற தலைவர் கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தரக்குறைவான வார்த்தைகளில் பேசி வருகிறார்.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகனை உடனடியாக பணியிட மாற்றம் செய்யக்கோரி வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவ ர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவை நேரில் சந்தித்து மனு அளிக்க இன்று வந்த போது, ஊராட்சி மன்ற தலைவர்களின் மனுவை வாங்காமல் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா காரில் ஏறி சென்றனர்.

இதனால் வேதனை அடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் அமர்ந்து தர்ணா செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை கண்ட கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் டிஎஸ்பி., ஜவகர்லால் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில், சமாதானம் அடையாத ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் ஊராட்சி மன்ற தலைவர்களை நேரில் சந்தித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவர்களிடம் மனுவை வாங்கி கொண்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர்கள் அளித்த மனுவை வாங்க மறுத்து, காரில் ஏறி சென்ற கலெக்டரை கண்டித்து நடைபெற்ற இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கொரோனா காலம் தொடங்கிய நாள் முதல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை, உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கேட்டறிவதையும், மனுக்கள் வாங்குவதையும், தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் செவி கொடுத்து கேட்பதோ அல்லது கோரிக்கைகளை நிறைவேற்றுவதோ இல்லை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று டுவிட் செய்துள்ள நிலையில், பெரம்பலூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் அதற்கு சான்றாக அமைந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!