Passengers request to take action to provide drinking water at Perambalur new bus stand!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்திற்கு வரும், ஏழை – எளிய பயணிகளுக்கு குடிநீர் நகராட்சி சார்பில், வழங்கப்படாததால், ஒரு லிட்டர் ஒன்று ரூ.20 கொடுத்து தண்ணீர் வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், பஸ் ஸ்டாண்டில் 1 லிட்டர் ரூ.10க்கு விற்று வந்த வந்த அம்மா குடிநீரும் விற்பனையும் தற்போது இல்லை. இதனால், கிராம வாசிகள், நெடுஞ்தொலைவு பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

விண்ணை முட்டும் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதோடு வரிகளும் உயர்ந்து வருகின்றன. ஆனால், உழைக்கும் கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஊதியம் பற்றாக்குறையாகி வருகிறது.

பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, அடிப்படை வசதிகளான குடிநீர், இயற்கை உபாதைகளை கழிக்க கட்டணமின்றி, செய்து கொடுக்க வேண்டியது, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கடமை. ஆனால், பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்குகள் கொரோனா காலத்தில் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தற்போது அவற்றை மீண்டும் உரிய இடங்களில் வைத்து பொதுமக்களுக்கு மீண்டும்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பெரம்பலூர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!