People return to normal life in Perambalur! Buses move smoothly again !!

பெரம்பலூர் மாவட்டம், முழுவதும் நிவர் புயலை எதிர்கொள்வதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் எடுத்தது. அதனால், தாழ்வான பகுதிகளில் வசிப்போரும், வீடற்ற நிலையில் கூடாரங்களில் மரத்தடியில் வசிப்பவர்களையும் மாவட்ட நிர்வாகம் அவர்களை தங்க வைத்து உணவு உள்ளிட்ட நிவாரணங்களை மேற்கொண்டது. நேற்றிரவு புயல் புதுச்சேரி அருகே கடக்கும் போது பெரம்பலூர் மாவட்டத்தில் அதீது கனமழை பெய்யும் என விடுத்த அறிவிப்பின் காரணமாக பலத்த மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிக குறைந்த வேகத்தில் வீசிய காற்றுடன் குறைந்த அளவே மழையும் பெய்தது. நல்வாய்ப்பாக நிவர் புயலால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இன்று காலை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. அத்தோடு, மகிழச்சி அடைந்த மக்கள், அரசு பணியாளர்களை தவிர பிற துறையினர் தங்கள் பணிகளுக்கு வழக்கம் போல் திரும்பினர். அரசு இன்று விடுமுறை அறிவித்து இருந்து தனியார் அரசு வங்கிகள், பல வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!