People tried to lay siege to burning coal in a private tyre factory: Police stopped them!

பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலையில் இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலைக்கு கிழக்கு புறம் குடியிருந்து வரும், காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் வசிக்கும், சுமார் 200 நரிக்குறவர் மற்றும் கலைக்கூத்தாடி குடும்பங்கள் வசித்து வருகின்றன.

தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நோய்கள் வருவதாகவும், அதை தடுத்து நிறுத்தவும், அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு, நிலக்கரி எரித்து மின்சாரம தயாரிக்க இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தவும் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை ஒன்று திரண்டு, டயர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், அவர்களை நுழைவு வாயிலுக்கு சற்று முன்பே தடுத்து நிறுத்தினர். மேலும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபடாதவாறு பார்த்து கொண்டனர். பின்னர், அங்கு வந்த வருவாய் மற்றும் காவல் துறையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க ஒரு வார காலம் அவகாசம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் கலைந்து சென்றனர்.

இது குறித்து, தொகுதி எம்.எல்.ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட முக்கிய நபர்களிம் மனுவும் கொடுத்துள்ளனர். அதன் பின்னர். அமைதி பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படாததால், அப்பகுதி மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தொழிற்சாலை மாசுக்களால் உண்மையிலேயே பொதுமக்கள் பாதிப்படைகிறார்கிளா என ஆய்வறிக்கை காலம் தாழத்தாமல் வெளியிட வேண்டும். இந்த சம்பவம் சுற்றுப் பகுதி மக்களையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனியார் டயர் தொழிற்சாலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகமும் அப்பகுதி மக்களிடம் வெளிப்படையாக நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!