People’s representatives are relieved by the comfort of the fire victims near Perambalur
அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், பெரம்பலூர் எம்.பி, ஆர்.பி. மருதராஜா, , ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவி அளித்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தில் கடந்த ஜுன். 17. அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் பழனிமுத்து என்பவரது மகள் தனலெட்சுமி என்பவரின் கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மேலும் 5 வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதன்காரணமாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 5 வீடுகள் மற்றும் அதிலிருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பெரம்பலூர் எம்.பி மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், திரு.ஆர். டி. இராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிகளான வேட்டி, சேலை மற்றும் உணவுப்பொருட்கள் மற்றும் உள்ளிட்ட உதவிப் பொருட்களையும், ரொக்கப் பணத்தையும் வழங்கினார்கள்.
மேலும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு மூலம் தேவையான உதவிகள் பெறுவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.