Perambalur: 155th birth anniversary of freedom fighter V.O.C.; members of the public pay tribute by garlanding his statue.


பெரம்பலூரில், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை 155வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிவன் கோவில் அருகே அவரது உருவ படத்திற்கு பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சங்கம், மற்றும் இளைஞர் அணி வ.உ.சி பேரவை நிர்வாகிகள் துணைத் தலைவர் தெ.பெ. வைத்தீஸ்வரன்பிள்ளை, வா. சீனிவாசன் பிள்ளை, த.பாஸ்கர்பிள்ளை. மற்றும் ,எஸ்.பி. சண்முகம், நல்லுசாமி, சிவசங்கர், உள்பட திரளான பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வெள்ளாளர் சங்கம் மற்றும் இளைஞர் அணி, வ உ சி பேரவையினர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!