Perambalur: A healthy baby is more important than whether it is a boy or a girl; Collector addresses a gathering of pregnant women.
கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல த்தான, சுவையான, சூடான உணவு உண்ண வேண்டும். கர்ப்ப காலத்தில் எடை அளவு, இரத்த அளவு (ஹீமோகுளோபின்) இரும்புச்சத்து குறைவாக இருந்தால் இயற்கை சார்ந்த காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், கீரை வகைகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரை செய்த நேரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும், கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். எடை அளவு, இரத்த அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் பிறந்ததுக்கு பிறகு மறுபடியும் பழைய உடல் நலத்தை பெற குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். கர்ப்ப காலத்தில் சத்தாக சாப்பிட்டால்தான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக பிறக்கும். சில கர்ப்ப கால தாய்மார்கள் வேலை பளு மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக சரியான முறையில் சத்தான உணவை எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் ஆன காலம் முதல் குழந்தை பெற்ற பின்பும் தாய்மார்களுக்கு சத்தான உணவு அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்க வேண்டும் என நமது அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் உங்கள் அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தினந்தோறும் தயார் செய்யப்படும் முட்டை, சத்து மாவு, கொழுக்கட்டை, கீரை சூப் (விடுமுறை தினங்களை தவிர) போன்ற சத்தான உணவை குறைந்தது 6 மாத காலத்துக்காவது நீங்கள் உட்கொண்டு உங்கள் உடல் நலன் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தை பேணிக்காக்க வேண்டும். இனி வரும் காலங்களில் எடை குறைந்த கர்ப்பிணி தாய்மார்களே இல்லை என்கிற நிலையில் மாநில அளவில் நமது மாவட்டம் முதல் இடத்தில் வரவேண்டும். நல்ல சத்தான உணவை சாப்பிடனும், நல்ல தலைமுறையும் வளர்க்கணும் என பேசினார். ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை விட ஆரோக்கியமான குழந்தையே வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினார்.
பின்னர், பொது சுகாதாரத்துறை சார்பில், அரசு யோகா மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் எவ்வாறு யோகா செய்து சிறு சிறு உடல் பிரச்சனைகளை சரி செய்வது தொடர்பாக யோகா பயிற்சிகளை செய்து காண்பித்தனர். தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசை பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது, மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கர்ப்பிணி தாய்மார்கள் உள்பட அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497