Perambalur: Shallot auctions have resumed at Chettikulam after eight years; Collector Sharanya took action following requests from farmers.

தமிழ்நாட்டில், பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயம் உற்பத்தியில் முதன்மை மாவட்டமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில், ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் மற்றும் அதன் சுற்று கிராமங்களில் விளையக்கூடிய சின்ன வெங்காயம் அதன் தனித்துவமான காரத்தன்மைக்காகவும் பல அடுக்குகள் கொண்ட தன்மைக்காகவும் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது· சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள ஆலத்தூர் வட்டாரத்தில் செட்டிகுளம் கிராமத்தில் சின்ன வெங்காய வணிகவளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2014 ஆம் ஆண்டு முதல் ஏலம் நடத்தப்பட்டு வந்தது. ஏலத்தில் விவசாயிகள் நேரடியாக வெளியூர் வியாபாரிகளிடம் தரகு கமிசன் இல்லாமல் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வந்தனர். பல்வேறு காரணங்களால் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்ற ஏலம் அதன் பின்னர் நின்று விட்டது. விவசாயிகள் தொடர்ந்து ஏலம் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கலெக்டர் ஷரண்யாவின் வழிகாட்டுதலின்படி இன்று சின்ன வெங்காய ஏலம் செட்டிகுளம் வளாகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது· இதில் 2·79 மெட்ரிக் டன் அளவு சின்ன வெங்காயம் 28 விவசாயிகளால் கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் 27 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்ச விலையாக 1 கிலோ வெங்காயம் ரூ 76-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் மொத்த மதிப்பு ரூ 1.47 லட்சம். ஏலத்தை கலெக்டர் ஷரண்யா, சப்-கலெக்டர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு ஏலத்தினை தொடங்கி வைத்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497