Perambalur: Public stages a sudden road blockade to protest against daily power outages lasting over two hours!

Modal Photo: AI – Gemeni


பெரம்பலூர் அருகே தினமும் 2 மணி நேரம் மின்வினியோகம் துண்டிக்கப்படுவதை கண்டித்து பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் தீடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணாபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வினியோகம் துண்டிக்கப்படுவதைக் கண்டித்து, நேற்றிரவு சுமார் 10:30 மணி அளவில் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பெரம்பலூர்-ஆத்தூர்-அரும்பாவூர் முச்சந்திப்பு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மின்வாரிய அலுவலர்கள் உறுதி அளித்ததின் பேரிலும், மின் வினியோகம் சீரானதையடுத்து பொதுமக்கள் பேராட்டத்தை விலக்கி கொண்டனர். இந்த போராட்டத்தால் பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!