Perambalur Consumer Disputes Redressal Forum shifted to Tiruvarur; Advocates’ Association announces human chain protest!


பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகக் குழுவின் அவசர கூட்டம் சங்க தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் நடந்தது. அதில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை 14 ஆக குறைத்து, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை திருவாரூருக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவை சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால், பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் வழக்கறிஞர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படும். இம்முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டியும், தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் பெரம்பலூரில் செயல்படவும் அல்லது திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்துடன் இணைத்திடவும் தமிழக அரசு, மத்திய அரசின் கவனத்திற்கு நமது கோரிக்கைகளை உடனடியாக கொண்டு செல்லும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் மட்டும் அச்சங்க உறுப்பினர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளிலிருந்து விலகியிருப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதோடு, கோரிக்கைகளை வலியுறுத்தி 07.09.2026 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து அச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. செயலாளர் வி.சேகர், பொருளாளர் பி.சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!