Perambalur: 12 pounds of jewelry stolen from the house of the person who went to mourn!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பாஸ்கரன் (47). இன்று காலை 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.
பின்னர், மீண்டும் மதியம் 12.30 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த சுமார் 12 பவுன் தங்க நகைகள் காணமல் போய் இருந்ததை அறிந்தர். அதிர்ச்சி அடைந்த அவர் 100க்கு போன் செய்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டப் பகலில் 12 பவுன் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.