Perambalur: 21,173 free housing land titles have been issued in 5 years; Minister Sivasankar is proud!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், வருவாய்த் துறையின் மூலம் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைச் 440 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கிய அவர் பேசியதாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி நாள்தோறும் புதுப்புது திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் சேவைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை செயல்படுத்தினார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில், பல்வேறு துறைகளின் மூலம் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் இந்த சேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதுபோல மக்களுடன் முதல்வர், இன்னுயிர் காப்போம் திட்டம், அன்புக்கரங்ள் போன்ற புது புது மக்களுக்கான செயல்படுத்தப்படுகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அதற்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தொடர் நடவடிக்கையால், மாவட்ட வருவாய் அலுவலரின் முயற்சியால் வருவாய்த்துறையினர், நில அளவை துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, இன்றைய தினம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 261 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 28 லட்சத்து 97 ஆயிரத்து 371 மதிப்பிலும், இணைய வழி மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்பிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 84 ஆயிரத்து 806 மதிப்பிலும், இணைய வழி பட்டா மூலம் 89 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 440 பயனாளிகளுக்கு ரூ.5.03 கோடி மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்கள் இன்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டங்களைச் சேர்ந்த மக்களின், பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் வட்டத்தில் 4,532 பயனாளிகளுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 5,579 பயனாளிகளுக்கும், குன்னம் வட்டத்தில் 5,563 பயனாளிகளுக்கும் ஆலத்தூர் வட்டத்தில் 5,499 பயனாளிகளுக்கும் என 21,173 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என தெரிவித்தார்.

அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜ்குமார், துரைசாமி, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், பேரூராட்சி தலைவர்கள் லெப்பை குடிக்காடு, ஜாகீர் உசேன் குரும்பலூர் சங்கீதா ராமேஷ், அரும்பாவூர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் சி.பாஸ்கர், மகாதேவி ஜெயபால் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!