Perambalur: 3 people tragically lost their lives in different road accidents: 2 seriously injured! Police investigating!

பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகு(22) மற்றும் ஸ்மித்(16). இவர்கள் இருவரும் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இதேபோல், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் பாலாஜி (37) அவரது மனைவி துர்கா(35) உள்ளிட்ட 7 பேர் சமயபுரம் சென்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தனர். காரை அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீராம் (21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

கார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது  முன்னால் அழகு ஓட்டிச் சென்ற மொபட் மீது கார் வேகமாக மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் மொபட்டில் பயணித்த ஸ்மித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த துர்கா பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், மொபட்டை ஓட்டி வந்த அழகு மற்றும் ஆகியோர் காரில் பயணம் செய்த பாலாஜி ஆகியோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் பெரம்பலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (55) என்பவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் பாலத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தும் பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!