Perambalur: 7 people, including the hotel owner, arrested for attacking a youth who was involved in a drunken argument!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சுதாகர் (37). சிசிடிவி தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். நேற்றிரவு முன்தினம் சுதாகர் குடிபோதையில் இருந்ததாகவும், பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள கடை ஒன்றில் பார்சல் வாங்கி உள்ளார். அப்போது பில் பணம் கொடுக்கும் போது தகாத வார்த்தைகளால் சுதாகர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் கடையில் இருந்தவர்களுக்கும் சுதாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளாகி கைகலப்பானது. இது குறித்து சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார்

கடை உரிமையாளர் கொளஞ்சிவேல், கடையில் இருந்த முத்துசாமி, சத்தியமூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன், ராமர், கோபிநாத் ஆகிய 7 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 7 பேரையும் சொந்த ஜாமீனில் அனுப்பினார். நாளுக்கு நாள் மதுப்பிரியர்களால் சிறு, குறு ஹோட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் நடத்தி வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!