Perambalur: A boy fell into a well and died while trying to pluck a guava!
பெரம்பலூர் அருகே கொய்யாக் காயை பறிக்க முயன்ற சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் காருகுடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், எழுமூர் அருகே உள்ள காருகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகித் (வயது 8), அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். பெற்றோர்கள் ஊருக்கு சென்று விட்டதால், இன்று பள்ளிக்கு செல்லமல் வீட்டிலேயே மோகித் இருந்துள்ளான். மேலும், மதிய நேரத்தில் வீட்டில் இருந்த சிறுவன் விளையாடி கொண்டிருந்தவன் காருகுடி செல்லும் வழியில் அவர்களுக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலுக்கு சென்ற சிறுவன் கொய்யாமரத்தில் காய்கயை சாப்பிடு பறிக்க முயன்றுள்ளான. அப்போது, தவறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.நீச்சல் தெரியாத காரணத்தில் சிறுவன் தண்ணீரில் மரண ஓல மிட்டுள்ளான். அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்றுவதற்குள் தண்ணீருக்குள் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தகவல் அறிந்த பெற்றோர்களும், மங்களமேடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர். குழந்தையை இழந்த பெற்றோர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.