Perambalur: A cake festival was held at Ashwin’s to mark the New Year; it was inaugurated by University Chancellor A. Srinivasan!

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், சேலம், ஒசூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் 40க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கி நிறுவனம் சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வாரு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு விதவிதமான கேக்குகளை கொண்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கேக் திருவிழா நடத்தி வருகிறது. அது போல 2026ம் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கேக் திருவிழா பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அஸ்வின் பார்ட்டி ஹாலில் நடத்துகிறது,
இந்த கேக் திருவிழா அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் தலைமையில் நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்கள் மேலாண்மை தலைவர் கே. வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தலைவர் எம். சிவசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். அஸ்வின்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ரெங்கராஜ், செல்வக்குமாரி கணேசன், தலைமை நிர்வாக அலுவலர் அஸ்வின், டாக்டர் ஹம்ருத்தா அஸ்வின், நிஷா, சிபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக, முன்னாள் யூனியன் சேர்மன் ராஜாராம், சாதிக் ரியல் எஸ்டேட் சுப்புடு, பாரத் கம்பனி கார்த்திக், வள்ளலார் குழுமம் அரவிந்தன், ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை, கீதா ரெஸ்டாரண்ட் சிவக்குமார், கல்யாணி மெஸ் சுந்தரம், மாருதி ரமேஷ், நளபாகம் ஹோட்டல் காசிவிஸ்வநாதன், கொங்கு ஐஸ்கிரீம் சிவக்குமார், உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், ஓய்வு பெற்ற சிஇஓ ஜெயராமன், மகேஷ்குமாரின், அரும்பாவூர் குறிஞ்சி ஸ்டோர் சிவா, சினிமா நடிகர் ரமேஷ், மற்றும் அஸ்வின்ஸ் குழுமத்தை சேர்ந்த சூர்யா, அசோக்குமார், மனித வள மேலாண்மை அலுவலர் குணா, உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், ஓட்டல் சங்கத்தினர், பெரும் திராளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த 13-ம் ஆண்டு புத்தாண்டு கேக் திருவிழாவில், புதிய ட்ரெண்ட் கேக் வகைகள், லைவ் கேக் தயாரிப்பு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் அட்வான்ஸ் மாடல் கேக்குகள், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப உடனுக்குடன் தயாரிக்கப்படும் கஸ்டமைஸ் கேக்குகள் ஆகியவை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பல்வேறு ருசி மற்றும் வடிவங்களில் கேக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேக் திருவிழாவை பார்வையிட்டு வருகின்றனர். இந்த கேக் திருவிழா இன்றும் நாளையும் (டிச- 31) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.










kaalaimalar2@gmail.com |
9003770497