Perambalur: A festival in which Perumal grants salvation to Nammalvar at the Esanai Venugopal Swamy Temple!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் உள்ள செண்பக வள்ளித் தாயார் உடனுறை வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.30-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கி தொடர்ந்து 22 நாட்கள் நடந்தது. ராப்பத்து உற்சவம் நிறைவு நாளான நேற்று ஆழ்வார் மோட்ச நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
வேணுகோபாலசுவாமி கோவிலில் ஜன.9-ந்தேதி முக்கிய உற்சவமான மோகினி அலங்காரம் ஜன.10-ந்தேதி பரமபதவாசல் திறப்பு உற்சவம், ஜன.17-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனைத்தொடர்ந்து ராப்பத்து உற்சவம் ஜன.10-ந்தேதி இரவு தொடங்கி நடந்துவந்தது. ராப்பத்து நிறைவு தினமான நேற்று நம்மாழ்வாருக்கு பெருமாள், மோட்சம் அருளும் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு மதியம் பெருமாளுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், மகாதீப ஆராதனையும் நடந்தது.
இரவில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவபெருமாள் பல்லக்கில் எடுத்துவரப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து கோனேரிபாளையம், நார்க்காரன்கொட்டகை உள்பட சுற்றுப்புற பகுதிகளைச்சோந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
ராப்பத்து நிறைவு மற்றும் ஆழ்வார் மோட்ச உற்சவ விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஸ்ரீதேவி, கோவில் அர்ச்சகர் துரைராஜ் பட்டாச்சாரியார் திருக்கோவில் எழுத்தர் காமராஜ் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
விளம்பரம்: