Perambalur: A man attempting to cross the road on a motorcycle was killed after being hit by a car!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சித்தன கவுண்டர் மகன் கலியமூர்த்தி (60), இவர் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் அவருடைய பைக்கில் பாடாலூர் ஹீரோ பைக் ஷோரூம் முன்பு சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் கலியமூர்த்தி சென்ற பைக் மீது மோதி விபத்திற்குள்ளனாது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், கை, கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நாரணமங்கலம் அருகே செல்லும் போது உயிரிழந்தார். மேலும், அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கலியமூர்த்திக்கு, மல்லிகா (எ) ராம பிரபா என்கிற மனைவி, மகள் சுகன்யா, மகன்கள் கார்த்திக், நவீன் ஆகியோர் உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.









kaalaimalar2@gmail.com |
9003770497