Perambalur: A man who went to pluck coconut blossoms for Vaikuntha Ekadashi died after being electrocuted!

பெரம்லூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சஞ்சீவி (28). வைகுண்ட ஏகாதசிக்காக தென்னம் பாளை பறிக்க நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், விளாமுத்தூர் சாலையில் உள்ள பெயிண்டர் மதியழகன் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள தென்னம்பாளை பறிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததாலும், போனை எடுக்காததாலும், சந்தேகம் அடைந்த சஞ்சீவியின் அண்ணன் முகிலன் (31), வயல்காட்டிற்கு சென்று தேடி பார்த்த போது, தென்னை மரத்திற்கு கீழே சஞ்சீவி விழுந்து கிடந்துள்ளார். பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்று காண்பித்த போது சஞ்சீவி ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர், புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தென்னை மரத்தின் கிளைகளில் மின்சார கம்பிகள் உரசிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. சஞ்சீவியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த போலீசார், பின்னர், உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!