Perambalur: A Cinema-like incident: A jeep lost control and crashed into a wall; The ADSP survived!

பெரம்பலூரில் இன்று காலை பணி நிமித்தமாக சென்று விட்டு பெரம்பலூர் – துறையூர் சாலையில் பெரம்பலூர் நோக்கி போலீஸ் ஏடி. எஸ்.பி பாலமுருகன் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். அரசுப் மேல்நிலைப் பள்ளியை அடுத்த பிரிவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் நேராக அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு சினிமாக பாணியில் உள்ளே புகுந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விபத்து அருகே சென்று பார்த்தனர். உள்ளே இருந்து அதிகாரியை மீட்டவர்கள் அதே வளாகத்தில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி பாலமுருகன் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அந்த நேரத்தில் எந்த வித வாகனங்களும் குறுக்கே வரவில்லை. ஜீப் தவிர வோறொரு வாகனமாக இருந்திருந்தால் விபரீதமாகி இருக்கும்.











kaalaimalar2@gmail.com |
9003770497