Perambalur: A. Raja MP inaugurated the free computer training center set up by Minister Sivashankar!
பெரம்பலூர் அருகே உள்ள குன்னத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், கலைஞர் கணினி பயிற்சி மையத்தை திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா எம்பி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான சிவசங்கர் ஏற்பாட்டில் குன்னம் தொகுதி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச வேலை வாய்ப்புடன் கூடிய கலைஞர் கணினி பயிற்சி மையத்தை அமைத்துள்ளார்.
கலைஞர் கணினி பயிற்சி மையத்தில் 3 மாத கால பயிற்சிகள் வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகள் தரப்பட உள்ளது. இதில், +2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். காலை 9:30 மணி முதல் 12.30 மணி பெண்களுக்கும், மாலை 5 30 மணி முதல் இரவு 8.30 வரை ஆண்களுக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் உமா சந்தோஷ் குமார், குன்னம் முன்னாள் தலைவர் தனலட்சுமி மதியழகன், குன்னம் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.