Perambalur: A rare opportunity; free driving training for men from rural areas!

பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான இலவச இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி வரும் 20-07-2026 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் நடக்கும் பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டசான்றிதழ் வழங்கப்படும் மற்றும் தொழில் தொடங்க சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.
பயிற்சியில் சேர 19 வயதுக்கு மேல் 49 வயதுடையவராகவும், எழுதப் படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ், பான் கார்டு, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து எளம்பலூர் சாலை, சுப்ரமணியம் வளாகத்தில் அமைந்துள்ள ஐஓபி வங்கியின் முதல் தளத்தில் உள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி (RSETI) மையத்தில் பதிவுசெய்துகொள்ளவும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் 18-07-2026 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், அப்பயிற்சி மைய இயக்குனர் முருகையன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலோ அல்லது 04328-299028, 9488840328 தொலைப்பேசி மூலமாக அலுவலக நேரத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30க்குள் தொடர்பு கொள்ளலாம் என அப்பயிற்சி மையத்தின் இயக்குநர் வி.முருகையன் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497