Perambalur: Not a publicity stunt, but setting an example—the Collector enrolled his child in an Anganwadi!

அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் என முன்னுதாரணமாக பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா தனது மகனை அருகே உள்ள விளாமுத்தூர் அங்கன்வாடி மையத்தில் சேர்த்தார்.

2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டியாகச் சத்துமாவுக் கொழுக்கட்டையும், மதிய உணவாகச் சூடாக சமைக்கப்பட்ட உணவும், வாரத்திற்கு 3 நாட்களுக்கு முட்டைகளும் வழங்கப்படுகின்றன. குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், 11 மாதங்களுக்கான பிரத்யேகப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் குழந்தைகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலையைக் கண்டறிந்து ஆவணப்படுத்த, மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்காணிப்பு அட்டையிலும் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே, விளையாட்டோடு கூடிய ஆரம்பக் கல்வி, ஊட்டச்சத்தான உணவு, பாதுகாப்பான சூழல் என அனைத்து வசதிகளும் நிறைந்த அரசு அங்கன்வாடி மையங்களின் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு மையங்களில் வழங்கப்படும் இத்தகைய சேவைகளைத் தங்களது குழந்தைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அரசு அங்கன்வாடி மையங்களில் சேர்க்க பெருமளவில் முன்வர வேண்டும் என தெரிவித்த அவர், தனது குழந்தை முன்னுதாரணமாக அங்காவாடியில் சேர்த்தார். இதனை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டரை பாராட்டினர்.

கலெக்டர் ஷரண்யா தனது மகனை தொடர்ந்து அரசு பள்ளியிலேயே 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தால் மட்டுமே இது விளம்பரம் போல் பகட்டு இல்லை என பிற்காலத்தில் மக்கள் கருதி பாராட்டுவார்கள். இல்லை என்றால் தற்போது பொதுமக்கள் வெளியிடும் ரீல்ஸ் போலவே கருதப்படும். இது போன்ற அதிகாரிகள் செயலால் ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கட்டும்.

வாழ்த்துகள் கலெக்டர் Mrs.ஷரண்யா !


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!