Perambalur: Four people, including a Panchayat Secretary, arrested for attempting to murder a man with a sickle because he kept filing petitions.

கடந்த ஜுலை. 6ம் தேதி திங்கட்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் 4 பேரை பாடாலூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் டி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் மணிமாறன் (65). இவர் ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதிக் கொடுக்கும் பணி செய்து வருகிறார். திங்கட்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் டி.களத்தூர் கிராமத்திற்கு ஆலத்தூர்கேட் – செட்டிகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குரும்பாபாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வரும் டி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி மகன் செந்தில்குமார் (31), அதே ஊரைச் சேர்ந்த கண்ணபிரான் மகன் ஸ்டாலின் (23), அரசகுமார் மகன் அசோக்குமார் (21) திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மதன்குமார் (24) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார், பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக விசாரணையில் மணிமாறன் தொடர்ந்து கிராமத்தில் உள்ள குறைகளை உயர்அதிகாரிகளுக்கு பெட்டிசன் போட்டு வந்ததாகவும், இதில், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் பாதிப்படைந்தைதாகவும், மேலும் மணிமாறனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு கூட்டு சதி செய்து அவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ள முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளர். இதற்கு துணையாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்தமதன்குமாரையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், இது பாடாலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பபட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497