TVK’s rule will not last beyond a year; former Minister Krishnamurthy speaks at the Perambalur AIADMK cadres’ meeting!

பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அவை தலைவர் குணசீலன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் நகர கழக செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி, துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி, தலைமை பொது குழு உறுப்பினர்கள் வீரமுத்து, ரெங்கநாதன், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அறிவு அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவபிரகாசம், ரவிசந்திரன், சசிகுமார், ராமராஜ், ராஜேந்திரன், செல்வமணி, ரமேஷ், அழகுதுரை, பேரூர் செயலாளர்கள் செந்தில்குமார், விவேகானந்தன், முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், விவசாய பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் அ.அருணாசலம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் என்.வெங்கடாசலம், கழக அமைப்பு செயலாளர் மருதராஜா, கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகாசி, அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பிச்சைமுத்து, மாணவரணி இணை செயலாளர் மணிஷ், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முன்னாள் அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் பேசியதாவது: ஒரு ஆண்டுக்குள் தவெக ஆட்சி இல்லாமல் போகும், பொதுசெயலாளர் பழனிசாமி தமிழகத்திலேயே அதிகமான 98 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தோல்வியை தழுவினார். இன்றைக்கு இயகத்தில் வெற்றி பெற்ற துரோகிகள் வாக்கள பெருமக்களுக்கும் துரோகம் செய்து விட்டு பதவிக்காக சம்பாதித்த பணத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதாற்காக ஓடுகிற ஒடுகாலிகளை பற்றி யாரும் கவலை பட வேண்டாம். இந்த இயக்கம் புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை ஒரு துரும்பை கூட யாராலும் தொட்டு பார்க்க முடியாது என சவாலாக கூறுகிறேன் என பேசினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜாராம், எம். ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட விவசாய அணி செயலாளர் லாடபுரம் கருணைராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட எம்.ஜி ஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் அசோகன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் காவியா ரவி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திர காசன்,மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் கே.எஸ்.லெனின், அம்மா பேரவை மாவட்ட தலைவர் கீழப்புலியூர் நடராஜன், ஒன்றிய பொருளாளர் குழுமூர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் ஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜமால் முகமது, முன்னாள் வழக்கறிஞர் பிரிவு கதிர்.கனகராஜ், மு.ஒன்றிய கவுன்சிலர் அருணா பாண்டியன், ஒன்றிய இளைஞரணி பன்னீர்செல்வம்,
ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் சிதம்பரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் மதுபால கிருஷ்ணன், இளைஞரணி துணை செயலாளர் பூபாலகிருஷ்ணன், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை தலைவர் ராமசாமி, வேப்பூர் ஒன்றிய இணை செயலாளர் கொளஞ்சிநாதன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை அனுக்கூர் பாஸ் (எ) செங்கமலை உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர சார்பு அணி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிசந்திரன் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497