Perambalur: A resolution was passed at a meeting of pharmaceutical traders demanding a ban on online medicine sales and measures to prevent counterfeit drugs.

பெரம்பலூர் மாவட்ட பார்மஸி மற்றும் டிரக்கிஸ்ட் அசோசியசனின் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் 4 ரோடு அருகே உள்ள அன்னமயம் ஹாலில் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கே. ஜெயராமன் கணக்கறிக்கை வாசித்தார். கூட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், போலி மருந்து கம்பனிகளை ஒழித்து தரமான மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரே மருந்து!, ஒரே விலை!! என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும். மருந்துகளுக்கு ஒரே எச்.என்.எஸ். குறியீடு வழங்கிட வேண்டும். போலி மருந்துகளை தடுக்க வேண்டும். உரிமங்கள் இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மருந்து வணிகர்களுக்கு வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை வீட்டு பயன்பாட்டிற்கான கட்டணமாக மாற்றி அமைத்து தர வேண்டும்என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம் இருதவியல் நிபுணர் வி.பிரகாஷ் தலைமையில் நடந்தது. முகாமை திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாடு, உதவி இயக்குநர் ஆர்.உமாமகேஸ்வரி, பெரம்பலூர் சரக மருந்து ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூட்டத்தில், டிரஸ்ட் நிர்வாக செயலாளர் கே. மனோகரன், உயர்மட்டக்குழு ஜி. குருமூர்த்தி, அமைப்புச் செயலாளர், ஏ. பாஸ்கரன், இணை அமைப்புச் செயலாளர் எம்.எஸ். சரவணன், திருச்சி மாவட்டத் தலைவர் கிருபானந்தமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், திருச்சி மாவட்ட செயலாளருமான எஸ்.டி சொக்கலிங்கம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். எம். பக்ரூதின் அலி அகமது நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497