Perambalur: A resolution was passed at the VCK party meeting demanding the removal of private school buildings located on government land!

பெரம்பலூர் பாலக்கரை சின்னமணி இராஜேஸ்வரி மண்டபத்தில் விசிக பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் த.சண்முகசுந்தரம் வரவேற்றார். ம.வி.இ. மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன், செய்தி தொடர்பாளர் அழகுமுத்து உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாநில, மண்டல, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அம்பேத்கர் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் வெண்கல சிலையை பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் நிறுவ அரசு முன்வர வேண்டும், கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆவண கொலைக்கு எதிராக விசாரனையை விரைந்து முடித்து, ஆவண கொலைக்கு எதிரான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும், கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்றகுழு தலைவர் சிந்தனைசெல்வனுக்கு அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,
சென்னையில் இருந்து செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு வழங்க வேண்டும், தலைவர் தொல்.திருமாவளவனின் கனவு திட்டமான வேர்களை தேடிப் பயணத்தை நமது மாவட்டத்தில் மேலும் துரிதப்படுத்து வேண்டும்,
பெரம்பலூர் உள்ள சில தனியார் பள்ளிகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களை அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலத்தூர் ஒன்றியத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூராக செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தலைவரின் ஆணைக்கு இணங்க கட்சியின் உள்விவகாரங்களை சமூக வலை தளங்களில் விவாதிப்பதை முற்றிலுமாக தவிர்க்க அனைவரும் முன்வர வேண்டும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் (பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி) சார்பில் 26 இலட்சம் நிதி திரட்டி தலைவரிடம் ஒப்படைக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும், மே 17 அன்று நடைபெறும் தமிழ் தேசிய மாநாட்டிற்கு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுமார் 200 வாகனங்களில் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்வது, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் விடுதலை இயக்கத்தின் மகளிர் மாநாட்டை சிறப்பாக நடத்துவது.
தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் வருகை புரியும் போது ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்க வைப்பது, மேலும் 9.00 மணிக்கு மேல் தலைவரை சந்திப்பதை மாவட்ட நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியை ஒதுக்காமல் பாகுபாடு காட்டும் பாஜக அரசை வன்மையாக கண்டிப்பது, எதிர்வரும் சட்டமன்றத் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
விசிக கட்சியை சேர்ந்த முன்னாள், இந்நாள் மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497