Perambalur: A student committed suicide by jumping into a well after his father refused to give him his bike for coming home late.

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் குன்னுமேடு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். மாவிலிங்கை கிராமத்தில், கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அன்பழகன் (20). நாரணமங்கலத்தில் உள்ள அரசு ஐடிஐ யில் பயின்று வந்தார். பைக்கில் சென்று வந்த அன்பழகன் காலதாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அதனை வின்சென்ட் கண்டித்து பைக் எடுத்து செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார். அதனால் கோபித்து கொண்ட அன்பழகன் 2 நாட்கள் ஐடிஐ-க்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று, அன்பழகனை அவரது தந்தை பைக்கில் ஐடிஐ-யில் விட்டு வந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பலமுறை செல்போனில் அழைத்த போது போனை எடுக்கவில்லை. வின்சென்ட் பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளளார்.
இந்நிலையில், இன்று காலை செட்டிக்குளத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் குத்தகைக்கு விவசாயம் பார்த்து வரும் கிணற்றின் மேல், புத்தக பை, செல்போன், காலணிகள் இருந்ததை பார்த்து வின்சென்டிற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடிய போது அன்பழகன் சடலமாக மீட்கப்பட்டான். அன்பழனுக்கு நீச்சல் தெரியாதாம். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், உடலை பெரம்பலூர் மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உணராத தனயன் கிணற்றில் விழுந்து தற்கொலை கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497