Perambalur: Action to waive home loans of those who returned home; Collector’s information!
பெரம்பலூர் மாவட்டத்தில் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து, தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்துக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர் களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது தாங்கள் கடன் பெற்ற சார் ஆட்சியர் அலுவலர் (Sub Collector) அலுவலகத்தினை அனுகி பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.