Perambalur Agriculture Department calls on small and micro enterprises under the Prime Minister’s Food Processing Scheme!

இந்திய பிரதமரால் 2020-21 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட “ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுனங்களை வலுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன், 2020-21ம் ஆண்டு முதல் 2024-25ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது, மத்திய அமைச்சகத்தின் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ் நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திதருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அதற்கு 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 10 இலட்சம் வரை நிதி உதவியும், மேலும், தேவைப்படும் தொழில் கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர்-9865529676, வேளாண்மை அலுவலர் (வே.வ), பெரம்பலூர் -9942381099, மற்றும் மாவட்ட தொழில் நுட்ப அலுவலர்-9965737555 ஆகியோர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!