Perambalur: An elderly man fell to his death while going to the toilet of a moving bus!

மதுரையில் இருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. பஸ்சை ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமத்தை சேர்ந்த கரிகாலன் மகன் சுரேஷ்கண்ணன் ஓட்டி சென்றார். அதில், மதுரை காலேஜ் மேற்கு தெருவை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (64), தனது மனைவியுடன் சிகிச்சைக்காக சென்றார். பஸ்சில் நிறைய பயணிகள் இருந்தனர்.
ஆம்னி பஸ் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் மேம்பாலம் அருக வந்த போது, மீனாட்சிசுந்தரம் பஸ்சுக்குள் இருந்த பாத்ரூமிற்குள் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர் வராததால், அவரது மனைவி சென்று பார்த்த போது பஸ்சுக்குள் தவறி விழுந்து கிடந்தார். உடனடியாக அவர் கொடுத்த தகவலின் பேரில் அருகில் இருந்து சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்த போது அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.









kaalaimalar2@gmail.com |
9003770497