Perambalur: Anna’s 117th birthday; DMK members garlanded and paid their respects!

பெரம்பலூர் மாவட்டத்தில், பேரறிஞர் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் – கே.என்.அருண்நேரு.எம்.பி.- சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு மண், மொழி, இனம் காக்கவும், தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை கேட்டுப் பெறுவோம் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுத்தனர்.
இதில் தொகுதி பார்வையாளர்கள் தங்க.சித்தார்த்தன், ஏ.கே.அருண், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச் செல்வி ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத்,
மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன்,ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில், கிருஷ்ணாபுரம் , வேப்பந்தட்டை ஆகிய இடங்களில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குரும்பலூர் நகர திமுக சார்பிலும் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டோம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497