Perambalur: Applications are invited for the Kabir Puraskar award; Collector provides information!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள், சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பக்கத்தை பெறத் தகுதியுடையர்கள்.
மேலும், இவ்விருதானது ஒரு இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற இனம், வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு முறையே ரூ.20,000, ரூ.10,000, மற்றும் ரூ.5,000, தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்திட வேண்டும். பதிவு செய்வதற்கான கடைசி நாள் 15.12.2025 ஆகும். எனவே, மேற்காணும் விருதுக்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497