Perambalur; Awareness mini marathon on drug eradication and resistance

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் முன்பாக தேசிய சட்டப்பணிகள் தினம் கொண்டாடப்பட்டது. மேலும், போதை ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்தான ‘மினி மாரத்தான்’ நடைபெற்றது. பள்ளி, கல்லூரி விளையாட்டு மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பத்மநாபன் வரவேற்று விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவிகள் வி.ஜனகா,எஸ். தனிஷ்கா எம். ஜோதிகா மற்றும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஏ.மருதசேகர், சி.சீமான், எஸ். கனகராஜ் ஆகியோருக்கு பரிசாக கேடயமும் சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மகிளா நீதிமன்றம் மாவட்ட நீதிபதி இந்திராணி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரகண்ணன், சார்பு நீதிபதி மோகனப்பிரியா மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி தன்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி தினேஷ் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 கவிதா உட்பட அனைத்து நீதிபதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள், அட்வகேட் அசோசியேசன் வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினர் ஆசிரியர் காமராஜ், தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

மினி மாரத்தான் ஓட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஏ.சரண்யா-வின் ஆலோசனையின்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!