Perambalur; Bicycle races on the occasion of Perarignar Anna’s birthday; Collector’s information!

ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் வகையில் அண்ணா பிறந்த தின மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2025-ஆம் ஆண்டிற்கு அண்ணா மிதி வண்டிப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28.09.2025 அன்று காலை 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் 13 வயதிற்குட்பட்டவர்கள், 15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 17 வயதிற்குட்பட்டவர்கள் என்று 3 பிரிவுகளாக நடத்தப்படும். போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் தங்களின் சொந்த சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும். இந்தியாவில் தயரான சாதாரன மிதிவண்டிப் போட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதி வண்டிகளை பயன்படுத்துதல் கூடாது. மாணவ, மாணவியர்கள் போட்டி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியர்களிடம் இருந்து பெற்று வருகை தருதல் வேண்டும். மேலும் தங்களின் ஆதார் அட்டை நகலினையும் சமர்ப்பிக்கவேண்டும். மிதிவண்டிப் போட்டிகளில் ஏற்படும் விபத்துகளுக்கோ மற்றும் தனிப்பட்ட இழப்புகளுக்கோ அவரவர் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5000/-, ரூ.3000/- மற்றும் ரூ.2000/- வீதமும், 4 முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.250/- வீதமும் பரிசுத் தொகையினை காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படும். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களின் வயது சான்றிதழ், வங்கி புத்தக நகல் மற்றும் ஆதார் கார்டு நகலுடன் போட்டிகளில் கலந்துகொண்டு பயனடையுமாறும் மேலும் விவரங்களுக்கு 7401703516 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறும் கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497