Perambalur: Book Fair; Advisory meeting held under the chairmanship of the Collector.

  பெரம்பலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

அப்போது, கலெக்டர் கிரஸ் பச்சாவ் தெரிவித்தாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 9வது புத்தகத்திருவிழா 31.01.2025 அன்று முதல் 09.02.2025 வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்தவுள்ள புத்தகத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான 1,00,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறவுள்ளது. புத்தக வாசிப்பு நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாகும். நம் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட வேண்டும். அனைவரின் வீட்டிலும் நூலகம் இருப்பது நம் வாழ்வை நாமே செம்மைப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத்திருவிழா இந்த வாய்ப்புக்கான வாயிற்கதவுகளை அனைவரின் வாழ்விலும் திறக்கும் .

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் மிகச்சிறப்பாக புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது. அறிவுத் திருவிழாவாக நடத்தப்படும். புத்தகத் திருவிழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு துறையின் சார்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.

மக்கள் பண்பாட்டு நிர்வாகிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், தனியார் கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!